search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணிகள் குளிக்க தடை"

    பராமரிப்பு பணிகள் காரணமாக கும்பக்கரை அருவியில் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. கொடைக்கானல், அடுக்கம் பகுதிகளில் மழை பெய்தால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து இருக்கும்.

    இந்த அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சபரிமலை சீசன் காலத்தில் பக்தர்கள் நீராடி செல்கின்றனர். தற்போது அருவியில் சீரான நீர்வரத்து உள்ளது.

    இருந்தபோதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுழலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதால் வனத்துறையினர் பராமரிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிக ஆழம் உள்ள இடங்கள் பாறைகள் ஆகிய இடங்களில் தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவ்வப்போது சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு பணிகள் நடைபெறும். அதன் பின்னர் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    ×